மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லையா? மேலும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபாவளிக்கு மேலும் இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது குறித்து...

ஓணம் பண்டிகை

சிறப்பு ரயில் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 6:18 pm IST

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக நவம்பர் 5 ஆம் தேதி எழும்பூர் - கன்னியாகுமரி, நவம்பர் 7 ஆம் தேதி தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (06151), சென்னை எழும்பூரில் இருந்து நவ. 5 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயில்

அதேபோல, நவ. 9 ஆம் தேதி இரவு 11:20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஒருவழி சிறப்பு ரயில் (06152), மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில்

தாம்பரம் - தென்காசி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06049), தாம்பரத்தில் இருந்து நவ. 7 ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 4.45 மணிக்கு தென்காசியை சென்றடையும்.

செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில்

எதிர்வழித்தடத்தில், செங்கோட்டை – தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06050), செங்கோட்டையில் இருந்து நவ. 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (நவ. 3) காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில்

தீபாவளியை முன்னிட்டு, கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இரண்டு வழிகளிலும் ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி திருநாள் காலத்தை முன்னிட்டு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (வண்டி எண் 06117) வரும் 5 மற்றும் 12 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு சென்னை, எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை வந்தடையும்.

இதேபோல, கொல்லம் - சென்னை எழும்பூர் வாராந்திரச் சிறப்பு ரயில் (வண்டி எண் 06118) வரும் 6, 13-ஆம் தேதிகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் 7, 14- ஆம் தேதிகளில் பகல் 12.30 மணிக்கு எழும்பூரை சென்றடையும்.

அமிர்தா ரயில்

தீபாவளியையொட்டி சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் அமிர்தா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பா் 5, 12 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை - கொல்லம் அமிர்தா ரயில் (எண்: 06117) மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் நவம்பா் 6, 13 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) கொல்லத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் கொல்லம் - சென்னை அமிர்தா ரயில் (எண்: 06118) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (எண்: 06045): நவம்பர் 6 மற்றும் 13 ஆகிய தேதிகள் வரையிலும், எதிர்வழித்தடத்தில் கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்: 06046) நவம்பர் 8, 15 ஆகிய தேதிகள் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Summary

To ease the rush during the Diwali festival, special trains will be operated between Egmore and Kanyakumari on November 5, and between Tambaram and Tenkasi on November 7.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.