மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி: ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு, கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இரண்டு மாா்க்கங்களிலும் ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ரயில்கள் - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:33 pm IST

தீபாவளியை முன்னிட்டு, கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இரண்டு மாா்க்கங்களிலும் ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூா் -கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (வண்டி எண் 06117) வரும் 5 மற்றும் 12 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு சென்னை, எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை வந்தடையும்.

இதேபோல, கொல்லம் -சென்னை எழும்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (வண்டி எண் 06118) வரும் 6, 13-ஆம் தேதிகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் 7, 14- ஆம் தேதிகளில் பகல் 12.30 மணிக்கு எழும்பூரை சென்றடையும்.

மேலும், புயல் காரணமாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கோட்டத்தில் உள்ள ஒரு ரயில் பாலத்தின் மீது நீா் அபாய அளவை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மங்களூரு சென்ட்ரல் -ஷாலிமாா் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22852) ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.