மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேரளத்தில் நிலச்சரிவு! ரத்தான தமிழக ரயில்கள் விவரம்!

கேரளத்தில் நிலச்சரிவு காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி...

Train

கேரளத்தில் நிலச்சரிவு - PTI

Published On :22 அக்டோபர் 2026, 12:17 pm IST

கேரளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள பாறைசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாகச் சென்ற பிலாஸ்பூர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் தடம் புரண்டது.

ரயில் என்ஜின் தடம் புரண்ட விபத்தில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிலாஸ்பூர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் நெய்யாற்றின்கரை - பாறைசாலை அருகே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து திருநெல்வேலி வரையிலான ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டது. பயணிகளை பேருந்து மூலம் திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

இந்த நிலையில், அதிகாலை முதல் தடம் புரண்ட என்ஜினை மீட்கும் நடவடிக்கையும், தண்டவாளத்திலிருந்து மண் சரிவை அகற்றும் பணிகளும் நடைபெற்றன.

இதன்காரணமாக பாறைசாலை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ரத்தான தமிழக ரயில்கள்

  1. ரயில் எண் - 56306 - திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு செல்லவிருந்த பயணிகள் ரயில் ரத்து

  2. ரயில் எண் - 56309 - நாகர்கோவில் சந்திப்பிலிருந்து இன்று மாலை 6.20 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிற்கு புறப்படவிருந்த பயணிகள் ரயில் ரத்து

  3. ரயில் எண் - 56102 - நாகர்கோவில் சந்திப்பிலிருந்து இன்று காலை 6.25 மணிக்கு கொல்லம் செல்லவிருந்த பயணிகள் ரயில் ரத்து

  4. ரயில் எண் - 56101 - கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 3.35 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு புறப்படவிருந்த பயணிகள் ரயில் ரத்து

  5. ரயில் எண் - 56305 - நாகர்கோவில் சந்திப்பிலிருந்து இன்று காலை 7.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிற்கு செல்லவிருந்த பயணிகள் ரயில் ரத்து

  6. ரயில் எண் - 56310 - திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து இன்று பகல் 1.25 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு புறப்படவிருந்த பயணிகள் ரயில் ரத்து

பகுதியளவு ரத்து

  1. ரயில் எண் - 22619 - பிலாஸ்பூரிலிருந்து அக். 20 ஆம் தேதி திருநெல்வேலிக்கு புறப்பட்ட விரைவு ரயில், நெய்யத்திங்கராவுடன் நிறுத்தப்படும். பயணிகளுக்கு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  2. ரயில் எண் - 16121 - தாம்பரத்திலிருந்து அக். 21 மாலை திருவனந்தபுரத்துக்கு புறப்பட்ட அம்ரித் பாரத் ரயில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  3. ரயில் எண் - 16122 - திருவனந்தபுரத்திலிருந்து இன்று காலை 10.40 மணிக்கு புறப்படவிருந்த தாம்பரம் அம்ரித் பாரத் ரயில், நாகர்கோவில் டவுன் நிலையத்திலிருந்து பகல் 11.47 மணிக்கு புறப்பட்டது.

இதனிடையே, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடம்புரண்ட ரயில் என்ஜின் அகற்றப்பட்டு, ரயில் சேவை சீராகியுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Summary

Landslide in Kerala! Details of cancelled Tamil Nadu trains!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.