மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கேரளத்தில் நிலச்சரிவு: தடம் புரண்ட பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில்

நிலச்சரிவு காரணமாக, பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் தடம் புரண்டது குறித்து...

Landslide derails locomotive in southern Keralam

கேரளத்தில் நிலச்சரிவு: தடம் புரண்ட பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் - கோப்புப்படம்

Published On :22 அக்டோபர் 2026, 11:33 am IST

திருவனந்தபுரம்: தெற்கு கேரள மாவட்டமான திருவனந்தபுரத்தில் உள்ள பாறைசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் தடம் புரண்டதால், நெய்யாற்றின்கரை-பாறைசாலை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் என்ஜின் தடம் புரண்டதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

நிலச்சரிவைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை 2.19 மணிக்கு பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் பாறசாலை அருகே நிறுத்தப்பட்டது.

அந்த இடத்தில் ரயில் நின்ற பிறகு, ரயில் என்ஜின் தடம் புரண்ட நிலையில் காணப்பட்டதாகவும், நல்வாய்ப்பாக "அனைத்துப் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் நெய்யாற்றின்கரை-பாறைசாலை அருகே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து திருநெல்வேலி வரையிலான ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டது. பயணிகளை அழைத்துச் செல்வதற்கு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், ரயிலை இயக்குவதற்காக ஒரு மாற்று என்ஜின் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்காக, மீட்பு பணியாளர்கள் மற்றும் விபத்து நிவாரண ரயில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்பெஷல் ஏரணியிலும், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் வடக்கு பணகுடியிலும், தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நாங்குநேரியிலும் நிறுத்தப்பட்டன.

மேலும், கன்னியகுமரி-மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சந்திப்பு-புனலூர் பயணிகள் ரயில், திருவனந்தபுரம் வடக்கு-நாகர்கோவில் சந்திப்பு பயணிகள் ரயில், புனலூர்-கன்னியகுமரி பயணிகள் ரயில் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து ரயில்களின் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவைதவிர, குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் புணே-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவையும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், நிலச்சரிவு, ரயில் என்ஜின் தடம் புரண்டதால் நாகர்கோயில்-திருவனந்தபுரம், கொல்லம் இடையே ஆறு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடியும் வரை அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம் பகுதியில் பெய்து கொண்டிருக்கும் கனமழைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு புதன்கிழமை மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. அக்டோபர் 22 முதல் அக்டோபர் 25 வரை கனமழை பெய்யக்கூடும் என கணித்து மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

A landslide near the Parassala railway station in this southern Keralam district early on Thursday derailed the locomotive of the Bilaspur-Tirunelveli Express

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.