மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எல்.முருகன் ராஜிநாமா: ம.பி.யில் நவ. 12-இல் மாநிலங்களவை இடைத்தோ்தல்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதவி விலகியதையடுத்து மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிப்பு....

Election commission

தலைமைத் தேர்தல் ஆணையம் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 4:44 am IST

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதவி விலகியதையடுத்து மாநிலங்களவை இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு நவ. 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருகிற அக். 26-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியாகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - நவம்பர் 2

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை - நவம்பர் 3

வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் - நவம்பர் 5

வாக்குப்பதிவு நடைபெறும் நாள் - நவம்பர் 12

அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

நவம்பர் 16-ம் தேதிக்குள் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன், மத்திய அமைச்சர் பதவி வகித்தார். அவர் தனது பதவியை கடந்த அக். 14-ம் தேதி ராஜிநாமா செய்தார். இதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எல். முருகனின் பதவிக்காலம் வரும் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Ex Union ministerL. Murugan resignation: Rajya Sabha by-elections announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.