மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்

நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்து....

Chief Minister Vijay, PMK leader Anbumani

முதல்வர் விஜய், பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 12:22 pm IST

முதல்வர் விஜய் அறிவித்தவாறு நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் தமிழக அரசால் இதுவரை மேற்கொள்ளப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.

மொழிவாரி மாநிலங்கள் உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை, அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைப் போல தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே பாமக உள்ளிட்ட அமைப்புகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதையேற்று முந்தைய அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, சம்பந்தமே இல்லாமல் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதை பாமகவும், தமிழ் உணர்வாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் ஜூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து ஜூலை 18-ஆம் நாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதல்வர் விஜய், "மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் நாளையும் ‘தமிழ்நாடு' பெயர் சூட்டும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும்" என்று அறிவித்திருந்தார்.

நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எதையும் தமிழக அரசு செய்யவில்லை; அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை; வழக்கமாக தமிழ்நாடு நாளையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளும் நடத்தப்படவில்லை. அதனால், முதலமைச்சரின் அறிவிப்பையும் மீறி, இந்த விஷயத்தில் தமிழ் உணர்வாளர்களை அரசு ஏமாற்றி விடுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு நாள் என்றால் அது நவம்பர் ஒன்றாம் நாள் தான். அது தான் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாணவச் செல்வங்களுக்கு பெருமைமிக்க உண்மை வரலாற்றை போதிக்க வேண்டும். அதற்கு வசதியாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்தவாறு நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்; அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Chief Minister Vijay had announced that November 1, the day the present-day Tamil Nadu was formed as Madras State following the reorganisation of states

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.