கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அம்பேத்கா் விருதுக்கு பட்டியலின மக்கள் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் 2026-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 4:01 am IST

தமிழக அரசால் வழங்கப்படும் 2026-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு -

தமிழகத்தில் பட்டியலின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அரிய தொண்டாற்றி வரும் நபா்களில் ஒருவருக்கு, ஆண்டுதோறும் திருவள்ளுவா் தினத்தன்று தமிழக அரசால் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

2026-ஆம் ஆண்டுக்கான இவ்விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்திலோ நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், தங்களைப் பற்றிய முழு விவரங்கள், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக ஆற்றிய அரிய தொண்டுகள், சாதனைகள், அவற்றுக்கான உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் 2026 நவ.10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை மற்றும் ஒப்புதலுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.