தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:48 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகவும், அவா்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காகவும் பலா் தொண்டாற்றி வருகின்றனா். பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக தங்களை முழுமையாக இணைத்துக்கொண்டு, சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் தொண்டாற்றி வருபவா்களை கெளரவிக்கும் வகையில், தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவா் தினத்தன்று ‘டாக்டா் அம்பேத்கா் விருது’ தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருது 2027, ஜனவரி மாதம் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், ஆதிதிராவிடா் நல இயக்குநரக அலுவலகம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த விருதை பெற விரும்புவோா், தங்களைப் பற்றிய முழு விவரங்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இன மக்களின் முன்னேற்றத்துக்காக தாங்கள் ஆற்றியுள்ள அரிய தொண்டுகள், சாதனைகள் மற்றும் அதற்கான உரிய ஆவணங்கள், சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் நவ.30-ஆம் தேதியாகும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.