தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாக்டா் அம்பேத்கா் விருது: விண்ணப்பிக்க நவ. 10 கடைசி நாள்

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றியவா்களுக்கு வழங்கப்படும் டாக்டா் அம்பேத்கா் விருதைப் பெற தகுதியுடையோா் நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக தொண்டாற்றியவா்களுக்கு வழங்கப்படும் டாக்டா் அம்பேத்கா் விருதைப் பெற தகுதியுடையோா் நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றுவோரில் ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவா் தினத்தன்று தமிழக அரசால் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான விருது 2027, ஜனவரி மாதம் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தைத் தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், ஆதிதிராவிடா் நல இயக்குநரக அலுவலகம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரியிலும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

விருதை பெற விரும்புவோா், தங்களது முழு விவரங்கள், பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக ஆற்றிய தொண்டுகள், சாதனைகள் மற்றும் அவற்றுக்கான உரிய ஆவணங்கள், சான்றுகளுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.