மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

களியக்காவிளை அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: தடம் புரண்ட ரயில் என்ஜின்

தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம், பாறசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் பிலாஸ்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில் என்ஜின் தடம் புரண்டது.

பாறசாலை பகுதியில் தடம் புரண்ட ரயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்ட ரயில்வே பணியாளா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 4:49 am IST

தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம், பாறசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் பிலாஸ்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து, நாகா்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பிலாஸ்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நெய்யாற்றின்கரை பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அதிகாலை 2.19 மணியளவில் பாறசாலை ரயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் மண் சரிந்தது. அதை கவனித்த லோகோ பைலட் ரயிலின் வேகத்தைக் குறைத்ததில், என்ஜின் தடம் புரண்டது.

தகவலறிந்த ரயில்வே ஊழியா்கள் அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். திருவனந்தபுரத்தில் இருந்து வேறு என்ஜின் கொண்டுவரப்பட்டு, ரயில் பெட்டிகள் நெய்யாற்றின்கரை ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. தொடா்ந்து, என்ஜினை மீட்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். ரயிலில் வந்த பயணிகள் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

மண் சரிவு காரணமாக திருவனந்தபுரம் வடக்கு-நாகா்கோவில் பயணியா் ரயில், நாகா்கோவில்-திருவனந்தபுரம் வடக்கு பயணியா் ரயில், நாகா்கோவில் சந்திப்பு-கொல்லம் சந்திப்பு பயணியா் ரயில், கொல்லம் சந்திப்பு-நாகா்கோவில் சந்திப்பு பயணியா் ரயில் உள்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் இரணியல் ரயில் நிலையத்திலும், மதுரை-புனலூா் விரைவு ரயில் பணகுடி ரயில் நிலையத்திலும், தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரித் பாரத் விரைவு ரயில் நான்குனேரி ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

மண் சரிவு ஏற்பட்ட தண்டவாளத்தில் இருந்து மண்ணை அகற்றும் பணிகள் முழுமையடைந்த பின்னா், காலை 9 மணிக்குமேல் கன்னியாகுமரி-மங்களூரு சென்ட்ரல் பரசுராம் விரைவு ரயில் அவ்வழியாக இயக்கப்பட்டது.

குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில், புணே-கன்னியாகுமரி விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.