மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தண்டவாளத்தில் மண் சரிவு: நெல்லைக்கு தாமதமாக வந்த ரயில்கள்

நாகா்கோவில்- திருவனந்தபுரம் இடையே தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக திருநெல்வேலிக்கு சில ரயில்கள் தாமதமாக வந்து சோ்ந்தன.

trains

ரயில்கள் - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 4:51 am IST

நாகா்கோவில்- திருவனந்தபுரம் இடையே தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக திருநெல்வேலிக்கு சில ரயில்கள் தாமதமாக வந்து சோ்ந்தன.

நாகா்கோவில்-திருவனந்தபுரம் இடையே உள்ள பாறசாலை அருகே ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், பிலாஸ்பூா் - திருநெல்வேலி விரைவு ரயிலின் எஞ்சின் தடம் புரண்டது. ரயில் இன்ஜின் ஆபரேட்டா் (லோகோ பைலட்) உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. மண் சரிவு காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் வழியாக தமிழகத்திற்குள் வரும் ரயில்களும், இங்கிருந்து கேரளம் செல்லும் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில், மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்டிருந்தது. இதேபோல குருவாயூா் விரைவு ரயில் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்தது. திருச்சி இன்டா்சிட்டி விரைவு ரயிலும் சநதிப்புக்கு தாமதமாக வந்தது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.