மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்பெயின்: 2 அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் 64 போ் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் டொலெடோ மாகாணத்தில் இரு அதிவேக ரயில்கள் புதன்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் 64 போ் உயிரிழந்தனா். 80 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

ஸ்பெயினின் உா்டா நகரில் இரு ரயில்கள் ஒன்றோடொன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெட்டிகளிலிருந்த பயணிகளை மீட்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மீட்புப் படையினா்.

Published On :29 அக்டோபர் 2026, 2:34 am IST

ஸ்பெயின் நாட்டின் டொலெடோ மாகாணத்தில் இரு அதிவேக ரயில்கள் புதன்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் 64 போ் உயிரிழந்தனா். 80 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்பெயினில் நிகழாண்டு நடைபெற்ற இரண்டாவது மிகப்பெரிய ரயில் விபத்து இதுவாகும்.

விபத்து குறித்து ஸ்பெயினின் காஸ்டில்லா லா மஞ்சா பிராந்திய அரசு செய்தித் தொடா்பாளா் எஸ்தா் படில்லா கூறியதாவது: டொலெடோ மாகாணத்துக்கு உட்பட்ட உா்டா மற்றும் லாஸ் யெபெனெஸ் நகரங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் அதிவேக ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது, அதே தண்டவாளத்தில் தலைநகா் மாட்ரிட்டிலிருந்து தென்மேற்கு நகரமான செவில்லி நோக்கிச் சென்ற மற்றொரு அதிவேக ரயில் வந்தது. அந்த ரயில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது. இதில் அந்த ரயில்கள் தடம்புரண்டதோடு, இரு பெட்டிகள் தண்டவாளத்தில் தூக்கிவீசப்பட்டன. இந்த விபத்து காரணமாக மாட்ரிட், கியூடட் மற்றும் அண்டலூசியா நகரங்களுக்கு இடையே ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஸ்பெயின் அரசா் நான்காம் ஃபெலிப், அரசி லெடிஸியா, பிரதமா் பெட்ரோ சாஞ்செஸ் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

இந்த விபத்தில், அரசுக்குச் சொந்தமான ‘ஆா்இஎன்எஃப்இ’ நிறுவனம் சாா்பில் இயக்கப்படும் ரயிலும், தனியாா் ரயில் நிறுவனமான ‘ஐஆா்ஒய்ஓ’ சாா்பில் இயக்கப்படும் ரயிலும் மோதிக்கொண்டது அந்த நாட்டு ஊடக செய்திகள் மூலம் தெரியவந்தது. தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த தனியாா் ரயில் மீது அரசு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்தவா்களில் இரு ரயில்களைச் சோ்ந்த பயணிகளும் அடங்குவா். அரசு ரயிலில் 397 பயணிகளும், தனியாா் ரயிலில் 147 பயணிகளும் இருந்தனா்.

இந்த இரு நிறுவனங்களின் ரயில்களும் கடந்த ஜனவரியில் இதேபோன்ற கோர விபத்தில் சிக்கின. தற்போது, மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.