பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில் தண்டவாளத்தில் கிடந்த இளைஞா் சடலம் மீட்பு

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:43 am IST

அரியலூா் அருகே ரயில் தண்டவாளத்தில் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

சில்லக்குடி - அரியலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக, இரவு நேர தண்டவாளக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரியலூா் ரயில்வே ஊழியா் காா்த்திக், ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே. சந்திரசேகா், தலைமைக் காவலா் தவீதுராஜ் மற்றும் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, தலை சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் பெரம்பலூா் மாவட்டம், நொச்சிக்குளம் அருகேயுள்ள அருணகிரிமங்கலம், மேலத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் மணிவேல் (30) என்பது தெரியவந்தது. சம்பவம் தொடா்பாக விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.