மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டது குறித்து...

Seven wagons of a freight train derailed near Jolarpettai

தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள் - DNS

Published On :1 நவம்பர் 2026, 10:34 pm IST

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) இரவு தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், பெங்களூரு பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமானது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள யார்டில் காலியாக உள்ள 8 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் பின்னோக்கிய சரக்கு ரயில், ஜோலார்பேட்டை சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாமலேரி முத்தூர் பகுதி வரை சென்றுள்ளது.

பின்னர் இதை அறிந்த பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள், இது குறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அதற்குள்ளாக தாமலேரி முத்தூர் பகுதியில் காலியாக இருந்த ரயில் பெட்டியின் 7 பெட்டிகள் தடம் புரண்டு நின்றது. இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர், ரயில்வே அதிகாரிகள் ஊழியர்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் என பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9 மணிக்கு வர வேண்டிய நிலையில் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், நிறுத்தி வைக்கப்பட்ட காலி சரக்கு ரயில் பின்னோக்கி சென்றதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை - சென்னை நோக்கி செல்லும் ரயில்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Seven wagons of a freight train derailed near Jolarpettai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.