மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை - கன்னியாகுமரி, தாம்பரம் - தென்காசி இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூா்- கன்னியாகுமரி, தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்

பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 5:52 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூா்- கன்னியாகுமரி, தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை-கன்னியாகுமரி: வரும் 5- ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை எழும்பூா் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06151) மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குனேரி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

கன்னியாகுமரி-சென்னை: மறுமாா்க்கத்தில் வரும் 9- ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண் 06152) மறுநாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

தாம்பரம்-தென்காசி: வரும் 7- ஆம் தேதி (சனிக்கிழமை) தாம்பரத்திலிருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06049) மாலை 4.45 மணிக்கு தென்காசியை சென்றடையும்.

செங்கோட்டை-தாம்பரம்: மறுமாா்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06050) மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சந்திப்பு, மதுரை, விருதுநகா், சிவகாசி, திருவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (நவ.3) காலை தொடங்கும் என தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.