சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீது நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறித்து..

அன்பில் மகேஸ்.

Published On :5 நவம்பர் 2026, 3:13 pm IST

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், நவ. 10 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு முன்பிணை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதையடுத்து, நவ. 6 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையல், ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நேரடியாக லஞ்சம் பெற்றதாக தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தனது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றார்கள் என்பதற்காக தன்னை எப்படி பொறுப்பாக்க முடியும். கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்பதால், ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரியிருந்தார்.

அதேபோல், அன்பில் மகேஸை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது அனுமதி வழங்கப்பட்டு மூன்று நாள்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜாமீன் மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அன்பில் மகேஸ் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் கடும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீது நவ. 10ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Summary

Anbil Mahesh's bail plea adjourned to Nov. 10!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.