தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது ஏன்? காவல்துறை அறிக்கை!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

anbil mahesh

அன்பில் மகேஸ் - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 7:34 pm IST

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி மற்றும் பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரது கைது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கைது செய்தது தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் 1. B.T. அரசகுமார், 2. சுரேஷ் மற்றும் 3. ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக, அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Summary

The Chennai Central Crime Branch police have issued a statement regarding the arrest of former minister Anbil Mahesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.