மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரெட் கார்டு கொடுக்கப்படுமா? டிடிஎஃப் வாசனை தாக்கவில்லை என நியாயப்படுத்தும் அக்‌ஷிதா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அக்‌ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என அதிகரிக்கும் கோரிக்கை குறித்து...

Will a red card be issued? Akshitha justifies her actions, claiming she did not hit TTF Vasan

டிடிஎஃப் வாசனை பாத்திரத்தால் தாக்கும்போது / அக்‌ஷிதா - எக்ஸ்

Published On :29 அக்டோபர் 2026, 5:05 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை அக்‌ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் விடியோவில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 8வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் குயிக் கன் கெளவ்பாய்ஸ், மைனிங் மாஃபியாஸ் என்ற போட்டியை புதிதாக அறிமுகம் செய்துள்ளார் பிக் பாஸ். இதுவரை எந்தவொரு சீசனிலும் இந்த போட்டி வைக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது

இப்போட்டியில் குயிக் கன் கெளவ்பாய்ஸ் அணியைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனை, மைனிங் மாஃபியாஸ் அணியின் அக்‌ஷிதா கடுமையாகத் தாக்குவதைப்போன்ற விடியோ வெளியாகியுள்ளது.

மைனிங் மாஃபியாஸ் அணியினர் உணவைத் திருட வந்தபோது, க்யிக் கன் கெளவ்பாய்ஸ் அணியினர் அதனைத் தடுக்க முயன்றனர். அப்போது ஆக்ரோஷமாக செயல்பட்ட அக்‌ஷிதா, கையில் இருந்த குக்கருடன் டிடிஎஃப் வாசனை தடுக்க முயன்றார். ஆனால், குக்கரால் தாக்க முயன்றதாக டிடிஎஃப் வாசன் கூறுகிறார்.

இது தொடர்பாக பிக் பாஸ் வெளியிட்ட விடியோவிலும் குக்கருடன் தாக்குவதைப்போன்றே இடம்பெற்றுள்ளதால், அக்‌ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் உள்ள முகேஷ் உள்ளிட்ட போட்டியாளர்களிடம் வாசனுடன் நடந்தது என்ன? என்பது குறித்து அக்‌ஷிதா விவரித்து வருகிறார். அதில், தான் வாசனை தாக்கவில்லை என்பதையே பதிவு செய்து வருகிறார்.

வார இறுதி நாள்களில் விஜய் சேதுபதி இது குறித்து கடுமையாக எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த வார இறுதி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Will a red card be issued? Akshitha justifies her actions, claiming she did not hit TTF Vasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.