மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிடிஎஃப் வாசன் இருக்கும் வரை பிக் பாஸ் வீட்டில் பஞ்சமில்லை! எதற்கு?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய நபராக மாறிவரும் டிடிஎஃப் வாசன் குறித்து...

 TTF Vasan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் - எக்ஸ்

Published On :27 அக்டோபர் 2026, 4:03 pm IST

டிடிஎஃப் வாசன் இருக்கும் வரை பொழுதுபோக்கிற்கு பிக் பாஸ் வீட்டில் பஞ்சமில்லை என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளில் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது. இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள 17 போட்டியாளர்களுமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதன்மூலம் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்குமே மக்கள் வாக்களிக்க வேண்டும். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.

இதற்கு மத்தியில் இந்த வாரத்துக்கான டாஸ்க்கை பிக் பாஸ் இன்று தொடங்கியுள்ளார். குயிக் கன் கெளவ்பாய்ஸ், மைனிங் மாஃபியாஸ் என்ற இரு அணியை பிக் பாஸ் உருவாக்கியுள்ளார்.

Story image

இதில் மைனிங் மாஃபியாஸ் அணி பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யும் உழைப்பாளிகள். இந்த வாரம் முழுக்க இடையிடையே போட்டிகள் வைக்கப்படும். இப்போட்டிகளில் கெளபாய்ஸ் அணி வெற்றி பெற்றால் கிச்சனை ரெய்டு செய்யலாம். மைனிங் மாஃபியாஸ் வெற்றி பெற்றால் கிச்சனை காப்பாற்றும் அதிகாரம் கிடைக்கும்.

முதல் போட்டியில் ஒரு அணி தங்க நாணயத்தை ஒளித்து வைக்க வேண்டும். அதனை மற்றொரு அணி கண்டுபிடிக்க வேண்டும். இப்போட்டியில் மாற்றி யோசித்த வாசன், வேண்டுமென்றே எதிரணி பார்வையில் நாணயம் படுமாறு வைத்துவிட்டு, அவர்களை உள்ளே அனுப்பி கிச்சன் பொருள்களை எடுக்க வைத்து, அவர்களிடமிருந்து கவர்ந்து அவற்றை அனுபவிக்கலாம் என்று திட்டமிடுகிறார். அவரின் இத்திட்டம் மிகுந்த சுவாரசியத்தைக் கொடுக்கும் என்பதால், சக போட்டியாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

Story image

இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் பிக் பாஸின் பாராட்டைப் பெற்ற வாசன், இந்த வாரமும் விளையாட்டை சுவாரசியமாக்குவதால், அவர் இருக்கும் வரை நிகழ்ச்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

As long as TTF Vasan is in the Bigg Boss house, there will be no shortage of fun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.