மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிடிஎஃப் வாசனால் பிக் பாஸ் முடிவுகள் மாறும்! நடிகர் ராகவ் பேச்சு!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனாலும் அவரின் ரசிகர்களாலும் இறுதி முடிவுகள் மாறலாம் என ராகவ் பேசியது குறித்து...

TTF Vasan

டிடிஎஃப் வாசன் / நடிகர் ராகவ் - எக்ஸ்

Published On :26 அக்டோபர் 2026, 4:24 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனாலும் அவரின் ரசிகர்களாலும் பிக் பாஸ் இறுதி முடிவுகள் மாறலாம் என நடிகர் ராகவ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இது குறித்து அவர் பேசியதாவது:

''பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுவந்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது கடினமாக இருக்கும் என்று பலர் கூறிக் கேட்டுள்ளேன். ஆனால், எனக்கு அப்படி எதுவும் இல்லை; போட்டி முடிந்து வந்த பிறகும் இயல்பாகவே இருந்தேன்.

கால் வலியை வைத்து பிக் பாஸ் வீட்டில் போலியான ஆட்டம் ஆடுவதாக முத்தழகி உள்ளிட்டோர் பேசும்போது எனக்காக குரல் கொடுத்தவர் டிடிஎஃப் வாசன். என்னை சந்தேகப்பட்டவர்களுக்கு எதிராக கோபப்பட்டவர் டிடிஎஃப் வாசன்.

டிடிஎஃப் வாசனுக்கு உள்ள ரசிகர்களால் பிக் பாஸ் முடிவு கூட மாற வாய்ப்புள்ளது. பிக் பாஸ் வீட்டில் யாருடைய செயல்கள் எப்படி மாறும் என்பது யாருக்கும் தெரியாது. ஆரம்பத்தில் ஆட்டமே புரியாத நபராக இருந்த டிடிஎஃப் வாசன் மறுவாரமே வாரத்தின் சிறந்த ஆட்டக்காரராக மாறினார்.

நாம் இயல்பாகக் கூறும் சில வார்த்தைகள் கூட மீம்ஸ்களாக மாறி சமூகவலைதளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினோத் பாபு, லட்சுமி பிரியா, தன்யா ஆகியோர் பிக் பாஸ் இறுதி மேடையில் இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவேன்'' எனப் பேசினார்.

Summary

TTF Vasan could change the Bigg Boss results! Actor Raghavs remarks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.