தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கனவிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் வருகிறார்கள்! வெளியேறிய பிறகு ராகவ் பேட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்குச் சென்ற பிறகும் கனவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வருவதாக நடிகர் ராகவ் தெரிவித்துள்ளது குறித்து...

Actor raghav

நடிகர் ராகவ் - DNS

Published On :26 அக்டோபர் 2026, 4:25 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்குச் சென்ற பிறகும் கனவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வருவதாக நடிகர் ராகவ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும்.

ஆனால், இம்முறை பிக் பாஸில் அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தின் இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக நடிகை சாந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். காலில் தசைக்கிழிவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் ராகவ்வும் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பேசிய ராகவ், நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் சென்ற பிறகும் கனவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தினமணி இணையதளப் பக்கத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இது தொடர்பாக அவர் பேசியதாவது:

''ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் இருந்து எந்திரன் படம் வரைக்கும் என்னை ரசித்தவர்கள் அதிகம். ஆனால் 2019 ஆம் ஆண்டில் இருந்து நான்நடித்த படங்கள் வெளியாகவில்லை. வெளியானாலும் அது யாருக்கும் தெரியவில்லை.

ஊரடங்கு முடிந்து நான் நடித்த படம் வெளியாகியிருந்தது. ஆனால், அது வெளியானதே பலருக்கும் தெரியவில்லை. நான் நடித்த இணையத் தொடர்களும் வெளியாகவில்லை.

இப்போது 20 வயதில் இருப்பவர்கள் என்னை யார் என்றே தெரியாது. அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வந்தேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது வருத்தமாக இருந்தாலும், நடப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடியவன் நான் என்பதால் பிரச்னையில்லை. ஆனால், தூங்கும்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் என் கனவில் வருகின்றனர். தூங்கி எழுந்தால் எங்கு இருக்கிறேன் என்பது கூற மறந்துவிடும் அளவுக்கு அது இருக்கிறது'' என ராகவ் குறிப்பிட்டார்.

Summary

Bigg Boss contestants even in dreams Raghav's interview after exit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.