மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சினிமா நடிகை என்பதால் சீரியல் நடிகைகள் சேர்த்துக்கொள்ளவில்லை! பிக் பாஸ் சாந்தினி

பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு அணியுடனும் சேராதது குறித்து நடிகை சாந்தினி விளக்கம்...

Actress Chandini

நடிகை சாந்தினி - DNS

Published On :26 அக்டோபர் 2026, 4:26 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகைகள் அதிகமாக இருந்தால், சினிமாவில் இருந்து சென்றதால் யாரும் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை என நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும்.

ஆனால், இம்முறை பிக் பாஸில் அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தின் இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக நடிகை சாந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு அணியிலும் இடம்பெறாதது குறித்து தினமணி இணையதளப் பக்கத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் சாந்தினி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: ''என்னை யாருமே எந்தவொரு குழுவிலும் சேர்த்துக்கொள்ளவில்லை, நான் சினிமாவில் இருந்து சென்றதால், வெளியே வைத்துப் பார்க்க ஆரம்பித்தனர். அங்கு மற்ற அனைவருக்கும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள். சீரியல் முடித்து உடனடியாக பிக் பாஸுக்கு ஒன்றாக வந்ததால் அவர்கள் என்பதால் சீக்கிரமாகவே இணைந்துகொண்டனர். ஏற்கெனவே அறிமுகமானவர்கள் நெருங்கிப் பழகுவது மனித இயல்புதான்.

ஆனால், நான் அனைவருடனும் நட்புடனே பழகிவந்தேன். 3 வாரங்களாக பெண்கள் அணியுடன் நான் ஒன்றவே முடியவில்லை. ஆண்கள் அணியில் இருந்தாவது சிலர் என்னிடம் பேசினர். சினிமாவில் இருந்து சென்றதால் அவர்கள் என்னை வெளியே வைத்துப் பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன்'' என்று சாந்தினி குறிப்பிட்டார்.

Summary

Actress Chandini explains why she did not join any team in the Bigg Boss house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.