மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் வீட்டில் பலவீனமான 3 போட்டியாளர்கள்! பட்டியலிட்ட நடிகை சாந்தினி!

பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்களை நடிகை சாந்தினி பட்டியலிட்டுள்ளது குறித்து...

Actress Chandini

நடிகை சாந்தினி - எக்ஸ்

Published On :21 அக்டோபர் 2026, 5:39 pm IST

பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்கள் குறித்து நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும்.

ஆனால், இம்முறை பிக் பாஸில் அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 5 வது வாரத்தின் இறுதியில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக நடிகை சாந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாந்தினி, பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்கள் குறித்துப் பேசியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமுமே நாமினேஷனில் இருப்பேன். ஆனால் இந்த வாரம் நான் வெளியேறிவிடுவேன் என என் உள்ளுணர்வு கூறியது.

அதன்படி நானே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்கள் உள்ளே உள்ளபோது நான் வேளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேண்டுமென்றே என்னை நாமினேஷன் பட்டியலில் வைத்துவிட்டனர்.

தன்யா, பிருத்வி, அஸ்மிதா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் பலவீனமான போட்டியாளர்களாக உள்ளனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நீடித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் யாரும் என்னுடன் மோதல்போக்கில் ஈடுபடவில்லை என்றும், கரீஷ்மாவுடன் மட்டும் முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறினார்.

அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் மிகவும் நெருக்கமான தோழியாக இருந்த அஸ்மிதா உடனும் சண்டை ஏற்பட்டது வியப்பாகத்தான் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Summary

Actress Chandini lists the weakest contestants in the Bigg Boss house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.