மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸில் இருந்து வெளியேறியது கனவுபோல் உள்ளது: ஷமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஷமா பேசியது தொடர்பாக...

Bigg boss 10 contestant Shama

ஷமா - எக்ஸ்

Published On :27 அக்டோபர் 2026, 5:49 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது கனவுபோல் உள்ளதாக ஷமா தெரிவித்துள்ளார்.

எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் தன்னிடம் இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் வெளியேறியது வருத்தமாக உள்ளதாகவும், மற்ற போட்டியாளர்களும் அதனை பயன்படுத்தாமலே வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. இதில் காமன்மேன் பிரதிநிதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷமா, கடந்த வாரத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் வென்றிருந்தாலும், அதனை பயன்படுத்தாததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதனை அந்த வாரத்தில் பயன்படுத்தியிருந்தால், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நீடித்திருக்கலாம். இதனை தொகுப்பாளர் ரம்யா கிருஷ்ணனும் அவரிடம் கேட்டிருந்த நிலையில், தான் இந்த வாரம் நன்றாக விளையாடியிருந்ததால் அதனை பயன்படுத்தவில்லை என ஷமா பேசியிருந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இது குறித்து ஷமா பேசியதாவது:

''எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் பயன்படுத்தாமலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. பிக் பாஸ் வரலாற்றிலேயே இதனை வென்ற முதல் நபராக மாறியது மகிழ்ச்சி. நான் நன்றாக விளையாடியிருந்ததால், அந்த வாரத்தில் அதனை பயன்படுத்தவில்லை. இது குறித்து இனி பேசினால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ''பிக் பாஸ் வீட்டில் இன்னும் இருவரிடம் எவிக்‌ஷன் ஃபிரீ பாஸ் இருப்பதால், அவர்களும் அதனை பயன்படுத்தாமலேயே வெளியேற வேண்டும். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ஒரு கனவு போல உள்ளது. நான் என்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்தேன்'' என ஷமா பேசியிருந்தார்.

Summary

Bigg boss 10 tamil Exiting Bigg Boss feels like a dream evicted contestant Shama

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.