மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஷமாவை கட்டியணைத்து வழியனுப்பிய பிக் பாஸ்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது ஷமாவுக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து...

Shama has become a favorite contestant of Bigg Boss

ஷமா - எக்ஸ்

Published On :26 அக்டோபர் 2026, 5:09 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் காமன்மேன் பிரதிநிதியாகப் பங்கேற்ற ஷமா, பிக் பாஸுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளராக மாறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது, யாருக்கும் இல்லாத வகையில் ஷமாவை கட்டியணைத்து நம்பிக்கையுடன் வெளியேறுமாறு பிக் பாஸ் கூறியிருந்தார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த ஷமா, ஆனந்த கண்ணீருடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் இதுவரை யாருக்கும் அப்படி செய்ததில்லை என சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக ஷமாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றுடன் 50 வது நாளை எட்டியுள்ளது.

இந்த வாரத்தின் இறுதியில் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில், குறைந்த வாக்குகளைப் பெற்றதாக ஷமா வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் போட்டியில் வென்று பரிசாகப் பெற்ற எவிக்‌ஷன் விலக்கு டிக்கெட்டை இம்முறை ஷமா பயன்படுத்தியிருந்தால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்க மாட்டார். ஆனால், அந்த டிக்கெட்டை இந்த வாரம் பயன்படுத்த விரும்பவில்லை என நம்பிக்கையுடன் ஷமா கூறியிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக ஷமா வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவர் வெளியேறும்போது பேசிய பிக்பாஸ், சிங்கப் பெண் என ஷமாவைக் குறிப்பிட்டார். போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து, ஆண்களுக்கு இணையான ஆட்டத்தைக் கொடுத்ததால், பிக் பாஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

உங்கள் வாழ்வில் என்றுமே தான் ஒரு அங்கமாக இருப்பேன் எனவும் பிக் பாஸ் குறிப்பிட்டு வாழ்த்து கூறினார். இதுமட்டுமின்றி ஷமாவின் கைகளை ஏந்தி நிற்குமாறு கூறி, அவரை மெய்நிகர் (விர்சுவல்) முறையில் கட்டியணைத்துக்கொண்டார்.

இதனை சக போட்டியாளர்கள் ஆரவாரம் எழுப்பி கொண்டாடினர். பிக் பாஸ் வரலாற்றில் எந்தவொரு போட்டியாளரையும் பிக் பாஸ் இந்த அளவுக்கு நெருக்கமாகக் கொண்டாடியதில்லை என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Shama has become a favorite contestant of Bigg Boss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.