மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் வினோத் பாபு! குவியும் பாராட்டுகள்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் வினோத் பாபு தலைமைக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Bigg boss 10 tamil Vinod Babu

வினோத் பாபு, அணியின் தலைவராக... - எக்ஸ்

Published On :21 அக்டோபர் 2026, 4:42 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் வினோத் பாபு தலைமைக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் சிவப்பு நிற அணியின் தலைவராகச் செயல்படும் அவினாஷைக் காட்டிலும், நீல நிற அணியின் தலைவரான வினோத் பாபு பல மடங்கு சிறப்பாகச் செயல்படுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சிவப்பு அணித் தலைவராக அவினாஷ், நீல நிற அணித் தலைவராக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வினோத் பாபுவின் தலைமையின் கீழ் அணியினர் சிறப்பாகச் செயல்படுவதாகவும், இதற்கான வாய்ப்புகளை வினோத் பாபு வழங்குவதாகவும் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிக் பாஸ் வைக்கும் போட்டிகளில் நிதானமாக ஒரு அணியாகப் பங்கேற்பதன் அவசியத்தை உணர்ந்ததால், தன்னை முன்னிறுத்தாமல் அணியை மட்டுமே வினோத் பாபு முன்னிறுத்துவதாகவும் ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

இதுவரை பிக் பாஸ் வைத்த மூன்று போட்டிகளில் நீல நிற அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சிவப்பு நிற அணியே மிகவும் பலமான அணி என பலர் கருதியிருந்தனர். இதனால் வெற்றி பெறுவது எளிது என சிவப்பு அணியின் தலைவர் அவினாஷ் தன் குழுவினரிடம் பேசினார்.

இதனிடையே நீல நிற அணி அடுத்தடுத்து சிறப்பாகச் செயல்படுவதாலும் போட்டிகளில் வெற்றி பெறுவதாலும் உடல் பலத்தை விட அணியின் கூட்டு ஒத்துழைப்பே முக்கியமானது என நீல நிற அணி நிரூபித்துள்ளதாகக் ரசிகர்கள் கூறுகின்றனர்.

நீல நிற அணியின் இந்த வெற்றிக்கு அணியின் தலைவராகச் செயல்படும் வினோத் பாபுவே காரணம் என பிக் பாஸ் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்துகள்...

ரசிகர்களின் கருத்துகள்...

Summary

Bigg boss 10 tamil Vinod Babu is the best leader of the Bigg Boss house fans praise

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.