மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் 10: அவினாஷுடன் போலியான சண்டை! திட்டமிட்டு நீல அணிக்கு மாறும் ஜேசன்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜேசனின் ஆட்டம் குறித்து...

Bigg boss 10 tamil update

நீல நிற அணியுடன் சிவப்பு அணியின் ஜேசன் - எக்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 4:36 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் எதிரணியை வீழ்த்துவதற்காக ஆளும் அணியுடன் போலியாக சண்டையிட்டு உளவு பார்க்கும் நபராக ஜேசன் மேற்கொள்ளும் நாடகம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் இந்த அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

Story image

இதில் சிவப்பு அணித் தலைவராக அவினாஷ், நீல நிற அணித் தலைவராக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிவப்பு நிற அணியில் டிடிஎஃப் வாசன், முத்தழகி, முனியம்மாள், கரீஷ்மா, அக்‌ஷிதா, ஜேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நீல நிற அணியில் அடாவடி அன்சர், ஷமா, அஸ்மிதா, ஷாதிகா, முகேஷ், தன்யா, லட்சுமி பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகள்...

இரு அணிகள்... - எக்ஸ்

கேப்டன் பொறுப்பை ஏதிர்பார்த்து காத்திருக்கும் ஜேசன், எதிரணியை வீழ்த்த சதித்திட்டம் தீட்டுகிறார். இதன்படி, சிவப்பு அணியின் தலைவன் அவினாஷ் உடன் போலியாக சண்டையிட்டு நீல நிற அணியில் சேர முயற்ச்சிக்கிறார்.

நீல நிற அணித் தலைவர் வினோத் பாபு மற்றும் குழுவினருடன் அமர்ந்து தங்கள் அணியில் சேர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறார். இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.

ஆட்டத்தை விறுவிறுப்பாக்குவதற்காக நீல நிற அணியுடன் ஜேசன் சேர்ந்துகொண்டு சிவப்பு நிற அணிக்காக விளையாடுவார் என்றும், இது யாராலும் தகர்க்க முடியாத மிகச்சிறந்த திட்டம் என ரசிகர்கள் பலர் ஜேசனின் ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர்.

Summary

Bigg boss 10 tamil update Fake fight with Avinash! Jason plans to switch to the blue team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.