மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் விதிகளில் திருத்தம்! இனி ஆளும் அணி, எதிரணி இல்லை?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து...

Bigg boss 10 tamil

பிக் பாஸ் சீசன் 10 - எக்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 5:54 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ஆளும் அணி, எதிரணிக்கு பதிலாக சிவப்பு அணி, நீல அணி என்று இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் இந்த அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சிவப்பு அணித் தலைவராக அவினாஷ், நீல நிற அணித் தலைவராக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிவப்பு நிற அணியில் டிடிஎஃப் வாசன், முத்தழகி, முனியம்மாள், கரீஷ்மா, அக்‌ஷிதா, ஜேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நீல நிற அணியில் அடாவடி அன்சர், ஷமா, அஸ்மிதா, ஷாதிகா, முகேஷ், தன்யா, லட்சுமி பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் அணியினர்

பிக் பாஸ் அணியினர்

இந்த விதிமுறைகளின்படி பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி, பிக் பாஸ் வீடும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிக் பாஸ் கழிப்பறை, சமையலறை, படுக்கை அறை, வரவேற்பறை என அனைத்தும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் நடுவே போடப்படும் கோடு எல்லையக் குறிப்பதாகவும்ம் இது ஒரு போரின் தொடக்கம்; இனி இந்த வீட்டில் ஒரே கேள்வி, சிவப்பா? நீலமா? என்பது மட்டுமேதான் என பிக் பாஸ் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வாரத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Bigg boss 10 tamil rules amended No more ruling team, no more opposition

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.