மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஏன்?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவது குறித்து...

ramya krishnan replace vijay sethupathi

விஜய் சேதுபதி / ரம்யா கிருஷ்னன் - எக்ஸ்

Published On :25 அக்டோபர் 2026, 5:15 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 50 வது நாளை எட்டியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரங்களில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்த நிலையில், இந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். சனிக்கிழமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு பதிலாக, தான் பிக் பாஸ் தொகுப்பாளராக வந்ததற்காக காரணம் குறித்தும் ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார். கடந்த இரு வாரங்களாக உடல்நலப் பிரச்னைகளுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்ததாகவும், இந்த வாரம் அவர் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துள்ளதாக ரம்யா கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

கடந்த வாரங்களில் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் நேரடியாக பதில் கூறாமல் சுத்தலில் விட்டதால், விஜய் சேதுபதியின் குரல் வளம் மோசமடைந்துவிட்டதாகவும், அவரின் குரலாகவும் மக்களின் குரலாகவும் தனது குரல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒலிக்கும் என ரம்யா கிருஷ்ணன் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதனால், இந்த வாரத்துக்கு மட்டுமே ரம்யா கிருஷ்ணன் வருவார் எனத் தெரிகிறது. குரல் தேறிய பிறகு விஜய் சேதுபதியே மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

ramya krishnan replace vijay sethupathi as host of Bigg boss 10 tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.