மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நான் அக்கா, தங்கைகளுடன் பிறந்தவன்! பிக் பாஸ் டிடிஎஃப் வாசனுக்கு குவியும் பாராட்டுகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனின் செயல்கள் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருவது குறித்து...

 Bigg Boss contestant TTF Vasan

சுத்தம் செய்யும் டிடிஎஃப் வாசன் - எக்ஸ்

Published On :29 அக்டோபர் 2026, 4:18 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனின் செயல்கள் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

கழிப்பறைப் பகுதியில் தங்கள் அணியினர் குப்பைகளைக் கீழே கொட்டிவிட்டுச் சென்றதற்காக அதனை ஷாதிகாவும் டிடிஎஃப் வாசனும் சுத்தம் செய்தனர்.

அப்போது பெண்கள் பயன்படுத்திய நாப்கின்கள் குப்பையில் இருந்ததால், வாசனை குப்பைகளை கீழே போட்டுவிட்டு வெளியேறுமாறு ஷாதிகா கூறினார்.

எனினும் அதனை பொருட்படுத்தாத வாசன், நானும் அக்கா, தங்கைகளுடன் பிறந்தவன்தான் எனக் குறிப்பிட்டு குப்பைகள் முழுவதையும் சுத்தம் செய்ய ஷாதிகாவுக்கு உதவினார்.

டிடிஎஃப் வாசனின் உள்நோக்கமற்ற இந்த செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. விளையாட்டுத்தனமாக இருந்தாலும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் டிடிஎஃப் வாசனின் பண்பு பலரைக் கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் குயிக் கன் கெளவ்பாய்ஸ், மைனிங் மாஃபியாஸ் என்ற போட்டியை புதிதாக அறிமுகம் செய்துள்ளார் பிக் பாஸ். இதுவரை எந்தவொரு சீசனிலும் இந்த போட்டி வைக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது

இப்போட்டியில், மைனிங் மாஃபியாஸ் அணி பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யும் உழைப்பாளிகள். இந்த வாரம் முழுக்க இடையிடையே போட்டிகள் வைக்கப்படும். இப்போட்டிகளில் கெளபாய்ஸ் அணி வெற்றி பெற்றால் கிச்சனை ரெய்டு செய்யலாம். மைனிங் மாஃபியாஸ் வெற்றி பெற்றால் கிச்சனை காப்பாற்றும் அதிகாரம் கிடைக்கும்.

அவ்வாறு, கிச்சனை ரெய்டு செய்யும்போது கெளவ்பாய்ஸ் அணியினர் குப்பைகளை கழிப்பறை முழுவதுமே கொட்டிவிட்டுச் சென்றனர். அதனை ஷாதிகாவும், டிடிஎஃப் வாசனும் சேர்த்து சுத்தம் செய்தனர்.

Summary

I grew up with sisters! Praise pours in for Bigg Boss contestant TTF Vasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.