மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் 10: முதல்முறையாக பெண் போட்டியாளருக்கு ரெட் கார்டு?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக பெண் போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவுள்ளது குறித்து...

Bigg boss 10 tamil akshitha attack ttf vasan in liveleades to red card

டிடிஎஃப் வாசனை தாக்கும் அக்‌ஷிதா - எக்ஸ்

Published On :28 அக்டோபர் 2026, 4:09 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக பெண் போட்டியாளர் ஒருவருக்கு ரெட் கார்டு வழங்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் டிடிஎஃப் வாசனிடம் மிகக் கடுமையாக அக்‌ஷிதா நடந்துகொண்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் உள்ள பாத்திரத்தை எடுத்து வாசனை அடிக்க அக்‌ஷிதா முயற்சிக்கிறார். தற்போது வெளியாகியுள்ள முன்னோட்ட விடியோவிலும் இக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களுமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே குயிக் கன் கெளவ்பாய்ஸ், மைனிங் மாஃபியாஸ் என்ற போட்டியை புதிதாக அறிமுகம் செய்துள்ளார் பிக் பாஸ். இதுவரை எந்தவொரு சீசனிலும் இந்த போட்டி வைக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இரு அணிகள்...

இரு அணிகள்...

இப்போட்டியில், மைனிங் மாஃபியாஸ் அணி பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யும் உழைப்பாளிகள். இந்த வாரம் முழுக்க இடையிடையே போட்டிகள் வைக்கப்படும். இப்போட்டிகளில் கெளபாய்ஸ் அணி வெற்றி பெற்றால் கிச்சனை ரெய்டு செய்யலாம். மைனிங் மாஃபியாஸ் வெற்றி பெற்றால் கிச்சனை காப்பாற்றும் அதிகாரம் கிடைக்கும்.

பிக் பாஸ் வீட்டில் உணவு பெரிய பிரச்னையாகவே இருந்து வரும் நிலையில், இந்த வாரத்தில் வைக்கப்பட்டுள்ள போட்டியும் உணவை மையமாக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

குயிக் கன் கெளவ்பாய்ஸ் அணியில் ஷாதிகா, அன்சர், அவினாஷ், டிடிஎஃப் வாசன், முகேஷ், லட்சுமி பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று மைனிங் மாஃபியாஸ் அணியில் வினோத் பாபு, ஜேசன், அஸ்மிதா, தன்யா, அக்‌ஷிதா, கரீஷ்மா, பிருத்வி, முனியம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Story image

டிடிஎஃப் வாசனைத் தாக்கும் அக்‌ஷிதா

போட்டியில் வெற்றி பெறும் அணி உணவை சொந்தம் கொண்டாடலாம். அந்த வகையில் குயிக் கன் கெளவ்பாய்ஸ் அணியினர் இன்று வெற்றி பெற்றதால் கிச்சனை ரெய்டு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு ரெய்டு செய்யும்போது உணவுப் பொருள்களை அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து கவர்ந்து சென்று கார்டன் ஏரியாவுக்குக் கொண்டுவந்தனர்.

டிடிஎஃப் வாசன் - அக்‌ஷிதா

டிடிஎஃப் வாசன் - அக்‌ஷிதா

அப்போது எதிர் அணியில் உள்ள அக்‌ஷிதா, வாசனைக் கட்டுப்படுத்த முயன்றார். இருவர் இடையிலான மோதல் ஒரு கட்டத்துக்கு மேல், பெரிதானது. அக்‌ஷிதா தனது கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து வாசனை தாக்க முயன்றார்.

உனக்கு அறிவு இல்லையா? பாத்திரத்தில் அடிக்கிறாய் என டிடிஎஃப் வாசன் கேட்கிறார். இதற்கு பதில் அளித்த அக்‌ஷிதா, உன்னைப்போல் முட்டாள் என் நினைத்தாயா? பாத்திரத்தில் அடிப்பதற்கு என்று பதில் அளிக்கிறார்.

இது தொடர்பான முன்னோட்ட விடியோவில் ரசிகர்கள் பலரும் அக்‌ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். அவ்வாறு ரெட் கார்டு கொடுக்கப்பட்டால், பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்டு பெறும் முதல் பெண் போட்டியாளராக அக்‌ஷிதா இருப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Summary

Bigg boss 10 tamil akshitha attack ttf vasan in liveleades to red card

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.