மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா? முகேஷ் உடன் மோதல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் உடனான மோதலால், டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா? என்பது குறித்து...

Bigg boss 10 tamil Clash with Mukesh Will TTF Vasan

முகேஷ் - டிடிஎஃப் வாசன் மோதல் - எக்ஸ்

Published On :20 அக்டோபர் 2026, 6:09 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் உடனான மோதலால், டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் இந்த அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சிவப்பு அணித் தலைவராக அவினாஷ், நீல நிற அணித் தலைவராக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீல நிற அணியில் முகேஷும் சிவப்பு நிற அணியில் டிடிஎஃப் வாசனும் இடம்பெற்றுள்ளனர்.

வாரத்தின் முதல் நாளில் செங்கல் மூலம் கோட்டை கட்டும் போட்டி வைக்கப்பட்டது. ஒரு அணி கோட்டையை கட்ட வேண்டும்; எதிர் அணி அதனை கவண் மூலம் அடித்து கலைக்க வேண்டும். இப்போட்டியில் இடையிடையே ஏற்பட்ட இடையூறுகளால் இருமுறை போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், விதிகளில் திருத்தம் செய்து மீண்டும் போட்டி நடைபெற்றது. இதில் நீல நிற அணி வெற்றி பெற்றது.

இதற்கிடையே வெற்றி - தோல்வி வாக்குவதத்தில் டிடிஎஃப் வாசனுக்கும் முகேஷுக்கும் இடையேயான வாக்குவாதம் உச்சநிலையை அடைந்தது. இதில், முகேஷ் மரியாதை குறைச்சலாகப் பேசியதால், டிடிஎஃப் வாசன் அடிக்கப் பாய்ந்ததாகத் தெரிகிறது.

இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கூடி இருவரையும் தடுத்தனர். இது தொடர்பான விடியோவும் வெளியாகியுள்ளதால், பிக் பாஸ் வீட்டில் அடிக்கப் பாய்ந்த டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலர் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

எனினும் இந்த சண்டை தொடர்பாக முகேஷும் டிடிஎஃப் வாசனும் சமரசமாகப் பேசி சமாதானம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg boss 10 tamil Clash with Mukesh Will TTF Vasan be given a red card

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.