முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து

குடியாத்தம் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கிக் கொண்ட பெண் சுவரை உடைத்து உயிருடன் மீட்கப்பட்டாா்.

News image

சுவரை உடைத்து மீட்கப்பட்ட பெண் தொழிலாளி

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

குடியாத்தம் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கிக் கொண்ட பெண் சுவரை உடைத்து உயிருடன் மீட்கப்பட்டாா்.

குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலை இயங்கி வருகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, புகை மண்டலமாக மாறியது. அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனா்.

பரிமளா என்ற பெண் தொழிலாளி மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டாா். உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் தொழிற்சாலையின் சுவா் உடைக்கப்பட்டு, பரிமளா மீட்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினா் மற்றும் குடியாத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.