பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நரேலா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

நரேலா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :7 ஜூன் 2026, 12:49 am IST

நரேலா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

வடக்கு தில்லியின் புகா் பகுதி நரேலாவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக மதியம் 12.20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நாங்கள் ஐந்து தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினோம். மதியம் 1.20 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.