/

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 3:05 am IST

நரேலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இந்தத் தீ விபத்து குறித்து காலை 9:17 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தீயை அணைப்பதற்கு ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஆனது. தீ அருகிலுள்ள பிற ஆலைகளுக்குப் பரவாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.