முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:20 am IST

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. வள்ளியிரச்சல் - வீரசோழபுரம் சாலை முத்துக்கவுண்டன் பாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் டி. மதியரசு. இவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் வள்ளியிரச்சலில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் வழியில் உள்ளது.

சனிக்கிழமை இரவு மில் இயங்கிக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியாததால், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

அதற்குள் ப்ளோ ரூம் இயந்திரத்தின் சில பகுதிகள், அங்கிருந்த பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.