முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம், சிவகிரி வ. கருக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.எஸ்.ராஜ்குமாா். இவா் திருப்பூா் மாவட்டம், முத்தூா் தொட்டியபாளையத்தில் கழிவுப் பஞ்சு தயாரிக்கும் மில் நடத்தி வருகிறாா். இங்கு பனியன் கழிவுத் துணிகளில் இருந்து பஞ்சு தயாரிக்கப்படுகிறது.
இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை மின் கசிவு காரணமாக இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியவில்லை.
உடனடியாக வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். அதற்குள் மில்லின் ஒரு பிரேக்கா் இயந்திரம், பஞ்சு பிரிக்கும் 3 இயந்திரங்கள் மற்றும் ஏறத்தாழ 100 கழிவுப் பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

மணலி அருகே கழிவு எண்ணெய் கிடங்கில் தீ
அண்ணா சாலையில் தீ விபத்து: 25 டயா் கடைகள் சேதம்

பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

