நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அணைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூா் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனா். எனினும், தீ மள, மளவென பரவியது.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று நாா் தொழிற்சாலையில் பற்றிய தீயை பொதுமக்கள் உதவியுடன் மேலும் பரவாமல் அணைத்தனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குருகிராமில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

HYUNDAI Mobis தொழிற்சாலையில் தீ விபத்து! தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

மணலி அருகே கழிவு எண்ணெய் கிடங்கில் தீ
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

