மாயாபுரி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது
இந்த தீவிபத்தைத் தொடா்ந்து 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
முன்னதாக, மாயாபுரி தொழிற்பேட்டையின் ஃபேஸ் 1 பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் காலை 11:17 மணியளவில் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது.
தீயின் தீவிரம் அதிகரித்ததால், அதை அணைக்க கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமாா் 500 சதுர கெஜம் பரப்பளவிலான கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இயங்கி வந்த எஃகு வெட்டும் மற்றும் பேக்கிங் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தீ முழுமையாகச் சூழ்ந்திருந்தது.
இக்கட்டடம் அடித்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களைக் கொண்டதாகும்.
தீயணைப்புப் பணிகளின்போது, முதல் மற்றும் இரண்டாவது தளங்களின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.
தீ விபத்து மற்றும் கட்டடம் இடிந்தன் காரணமாக ஏற்பட்ட கட்டமைப்பு சேதங்களால், கட்டடம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.
பிற்பகல் 2:20 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்செய்தி வெளியாகும் நேரம் வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒசூரில் ரப்பா் தொழிற்சாலையில் தீ விபத்து

தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து
நரேலா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

குருகிராமில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

