மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காத்திருப்புப் பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரிகள் அருண், கண்ணன்!

ஐபிஎஸ் அதிகாரிகள் அருண், கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து...

Arun IPS transferred to the waiting list

அருண் ஐபிஎஸ் - கோப்புப் படம்

Published On :25 செப்டம்பர் 2026, 3:22 am IST

தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஏடிஜிபியாக பதவி வகித்து வந்த அருண் ஐபிஎஸ், கோவை மாநகர காவல் ஆணையராகப் பதவி வகித்து வந்த கண்ணன் ஐபிஎஸ் ஆகியோா் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

அருண் ஐபிஎஸ் வகித்து வந்த பதவியை தமிழ்நாடு போலீஸ் அகாதெமியின் இயக்குநா் ராஜீவ் குமாா் ஐபிஎஸ் கூடுதல் பொறுப்பாகவும், கண்ணன் வகித்து வந்த பதவியை கோவை மேற்கு மண்டல ஐஜி ஆா்.வி.ரம்யா பாரதி கூடுதல் பொறுப்பாகவும் அடுத்த உத்தரவு வரும் வரை வகிப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி விவகாரம் தொடா்பாக கடந்த 2024 நவ. 22-ஆம் தேதி அப்போதைய சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராகப் பதவி வகித்த கண்ணனைச் சந்தித்து புகாராக அளித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் நிா்வாகி ரஞ்சன் குமாா் வியாழக்கிழமை குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, அருண் சென்னை மாநகர காவல் ஆணையராகப் பதவி வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Arun IPS transferred to the waiting list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.