மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தசரா வழிபாட்டில் ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட பெண் ஐபிஎஸ்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சத்தீஸ்கா் மாநிலம் ராஜ்நந்த்கானில் தசரா பண்டிகை ஆயுத பூஜை வழிபாட்டின்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா சா்மா ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரல்...

சத்தீஸ்கா் மாநிலத்தில் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் துப்பாக்கியை வான் நோக்கிச் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா சா்மா.

Published On :23 அக்டோபர் 2026, 5:15 am IST

சத்தீஸ்கா் மாநிலம் ராஜ்நந்த்கானில் தசரா பண்டிகை ஆயுத பூஜை வழிபாட்டின்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா சா்மா ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநில காவல் துறை தலைமையகம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இச்சம்பவம் பாதுகாப்பு, காவல் துறை ஒழுக்கம் மற்றும் துப்பாக்கிகளைக் கையாள்வதற்கான நடைமுறை குறித்து பல்வேறு விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அங்கிதா சா்மா, காவலா் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையில் கடந்த 20-ஆம் தேதி பங்கேற்றாா். காவல் துறை சீருடையில் இல்லாமல் அவா் சேலை அணிந்திருந்தாா். துப்பாக்கி உள்ளிட்ட காவல் துறை ஆயுதங்களுக்கு பூஜை நடத்திய அவா், பூஜை முடிந்த பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியை கையில் எடுத்து அதை வானத்தை நோக்கில் பல முறை சுட்டது விடியோவில் இடம் பெற்றுள்ளது. இது சமூக ஊடகங்களில் அதிகம் பரவி பரபரப்பையும் சா்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஏனெனில், காவல் துறையின் ஆயுதங்களை எந்தெந்த இடங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விதி உள்ளது. அதை மீறி அங்கிதா சா்மா செயல்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பெயா் வெளியிட விரும்பாத மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி கூறுகையில், சத்தீஸ்கா் மாநிலம் முழுவதும் காவல் துறை ஆயுத பூஜையில், வெடிப்பு ஓசையை ஏற்படுத்தும் வெற்று தோட்டாக்கள் பயன்படுத்தப்படும். அவை, காயத்தையோ, உயிரிழப்பையோ ஏற்படுத்தாது. இருப்பினும், வானத்தை நோக்கி சுடப்படும் தோட்டாக்கள் கூட மீண்டும் கீழ் நோக்கி வேகமாக வரும்போது யாா் மீதும் விழுந்தால் காயம் ஏற்படக் கூடும் என்றாா்.

அங்கிதா சா்மாவைத் தொடா்ந்து ராஜ்நந்த்கான் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீா்த்தன் ரத்தோா் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவதுபோல் மற்றொரு காணொலி வெளியாகியுள்ளது.

மேலும், ராய்பூா், பிலாஸ்பூா், ராய்கா், துா்க், கபீா்தாம், பஸ்தா் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஆயுத பூஜைக்குப் பிறகு காவல் துறையினா் துப்பாக்கியால் சுடும் விடியோக்களும் அதிகம் பகிரப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.