மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மைசூர் தசரா பூஜையில் தலித் அமைச்சர்கள் தடுக்கப்பட்ட சம்பவம்! விசாரணைக்கு உத்தரவு!

மைசூர் தசரா விழாவில் தலித் அமைச்சர்களை காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் பூஜையில் பங்கேற்கவிடாமல் தடுத்தது குறித்து விசாரணைக்கு உத்தரவு...

DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - (கோப்புப்படம்)

Published On :22 அக்டோபர் 2026, 3:51 pm IST

மைசூர் தசரா விழாவில் தலித் அமைச்சர்களை பூஜையில் பங்கேற்கவிடாமல் காவல் துறை அதிகாரி ஒருவர் தடுத்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தசரா பண்டிகையை முன்னிட்டு, மைசூர் மாளிகை வளாகத்தில் உள்ள கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகில் கடந்த புதன்கிழமை (அக். 21) நடைபெற்ற நந்தி த்வஜ பூஜையில் பங்கேற்கச் சென்ற கர்நாடக கலாசார அமைச்சர் சிவராஜ் டங்கட்கி, வேளாண் அமைச்சர் பி.எம். நரேந்திர சுவாமி, அறநிலையத் துறை அமைச்சர் கே.எஸ். பசவந்தப்பா ஆகியோரை காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சி.பி. ரிஷியாந்த் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், ஏராளமான தலித் மற்றும் முற்போக்கு அமைப்புகள் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு கர்நாடக தலைமைச் செயலர் ஷாலினி ரஜ்னீஷுக்கு முதல்வர் சிவகுமார் இன்று (அக். 22) உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி, கர்நாடக முதல்வர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அமைச்சர்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த அதிகாரியின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு அமைச்சர்களை உள்ளே அனுமதிக்கப்படுவதை உறுதி செய்தேன். ஆனாலும், அதிகாரியின் இந்த அலட்சியத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, தலைமைச் செயலரின் விசாரணையில் காவல் துறை அதிகாரி ரிஷியாந்த் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Summary

Karnataka CM DK Shivakumar has ordered a proper investigation into the incident where a police officer prevented Dalit ministers from participating in the puja at the Mysore Dussehra festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.