மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க ரூ.600 கோடி சதித்திட்டம்! சிவகுமார் மீது குமாரசாமி நேரடி குற்றச்சாட்டு

தேவேகௌடா குடும்பத்தை ஒழிக்க ரூ.600 கோடியில் சதித்திட்டம் தீட்டியதாக முதல்வர் சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு வைத்திருப்பது குறித்து..

கர்நாடக அரசியல் தலைவர்கள்

கர்நாடக அரசியல் தலைவர்கள்

Published On :26 அக்டோபர் 2026, 12:30 pm IST

முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகௌடாவின் குடும்பத்தை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திட்டத்தை தீட்டியதாக மத்திய அமைச்சரும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சித் தலைவருமான எச்.டி. குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக முதல்வர் மீது, குமாரசாமி இவ்வாறு நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதன் மூலம், மாநிலத்தில் இருந்துவரும் ரகசிய நடவடிக்கை தொடர்பான அரசியல் குற்றச்சாட்டுகள் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஒரு அரசியல் குடும்பத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து கேட்டதற்கு பதிலளித்த குமாரசாமி, தேவே கௌடாவின் குடும்பத்தை இலக்காகக் கொண்ட தொடர் சதித்திட்டங்களுக்குப் பின்னால் கர்நாடக முதல்வர் சிவகுமார் உள்ளார். இந்த ஒப்பந்தம், அதுபோன்ற ஒரு சதி திட்டம்தான்.

குமாரசாமி கூறியதாவது, எங்கள் குடும்பத்தை ஒழித்துக்கட்ட உத்தரவிட்டது தற்போதைய முதல்வர்தான். எங்கள் குடும்பத்தை அழித்தொழிக்க அவர் பல சதித்திட்டங்களைத் தீட்டியுள்ளார். அதில் ஒன்றுதான் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சுபாரி எனப்படும் கூலிப்படை வைத்து கொலை செய்யும் ஒப்பந்த திட்டம். இந்தச் சதித்திட்டத்திற்கு சிவகுமாரே காரணம் என்றும் அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரணையில் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் எந்தவொரு புலனாய்வு முடிவுகளும், இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்பதை உறுதி செய்யும் வகையில் கிடைக்கவில்லை. எனினும் இது தொடர்பாக கர்நாடக அரசியலில், கடும் மோதல் வெடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.