தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலைவாய்ப்பில் கன்னடர்களை புறக்கணித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்: டி.கே. சிவகுமார்

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் கன்னடர்கள் புறக்கணிக்கப்பட்டால் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Chief Minister DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம் | ANI

Published On :25 அக்டோபர் 2026, 7:40 pm IST

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் கன்னடர்கள் புறக்கணிக்கப்பட்டால் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கன்னட மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் தொடர்பான விஷயங்களில் அரசு எந்தவித சமரசமும் செய்யாது என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில், “பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக வரும் புகார்கள் வருத்தமளிக்கிறது. கன்னட மொழியை தாய்மொழியாகப் பேசுபவர்கள் ஓரங்கட்டப்படும் பிரச்சினைகளை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே முன்னுரிமை. கன்னடர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதை எந்தக் காரணத்திற்காகவும் அரசு அனுமதிக்காது.

பெங்களூருவை இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகராக உலகம் காண்கிறது. எங்கள் கன்னடர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களில் நாங்கள் என்றும் பெருமிதம் கொள்கிறோம்.

தனியார் நிறுவனம் ஏதேனும் கன்னடர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பது கண்டறியப்பட்டால் அரசு அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்.

கன்னடர்களின் குரலாக, அவர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Government will take action if Kannadigas are ignored in employment: D.K. Sivakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.