மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போலந்து உடன் கைகோக்கும் கர்நாடகம்! பிரதமர் டஸ்க், முதல்வர் சிவகுமார் சந்திப்பு!

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் கர்நாடக முதல்வர் சிவகுமார் இடையேயான சந்திப்பு குறித்து...

Chief Minister D.K. Shivakumar met Polish Prime Minister Donald Tusk

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - ENS

Published On :24 அக்டோபர் 2026, 10:44 am IST

பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் கர்நாடகம் மற்றும் போலாந்து இணைந்து செயல்படவுள்ளதாக, போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில், கடந்த வெள்ளிக்கிழமை (அக். 23) நடைபெற்ற இந்தியா - போலாந்து வர்த்தக மன்றத்தில், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், முதலீடு, வணிகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து உரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான முதலீடுகளுக்கு கர்நாடகம் ஒரு நுழைவு வாயிலாகச் செயல்படும் திறன்பெற்றுள்ளதாகக் கூறிய பிரதமர் டஸ்க், இருதரப்பும் பெருமளவில் இளம் வயதுப் பணியாளர்களைக் கொண்டுள்ளதால், இந்த ஒத்துழைப்பு இருதரப்புக்கும் நன்மையை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோலார் மாவட்டத்தில் உள்ள கர்நாடக அரசின் தொழிற்பேட்டையில் போலந்தின் டிஸிஎம்ஓ எனும் நிறுவனம் சுமார் 80 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள் செய்யவுள்ளதாகவும், அந்த அமைப்புக்கு அப்பகுதியில் கர்நாடக தொழிற்பேட்டை வாரியம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பிரதமர் டஸ்க் மற்றும் முதல்வர் சிவகுமார் முன்னிலையில், செய்யறிவு (ஏஐ), குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்த பெங்களூரின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் போலந்தின் கிராகோவ் ஏஜிஹெச் பல்கலைக்கழகம், இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Summary

Polish PM Donald Tusk has said that Karnataka and Poland will work together in sectors including defense and space.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.