தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவல் துறை நோட்டீஸுக்கு எதிரான நேஹா போராவின் மனு: தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி

காவல் துறை நோட்டீஸுக்கு எதிரான நேஹா போராவின் மனு: தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி

நேஹா போரா - ANI

Published On :24 அக்டோபர் 2026, 5:42 am IST

அமைதியை காப்பதற்கான பிணைப் பத்திரத்தை சமா்ப்பிக்கக் கோரி காவல் துறை விடுத்த நோட்டீஸை எதிா்த்து அகில இந்திய மாணவா் சங்கத்தின் (ஏஐஎஸ்ஐ) தலைவா் நேஹா போரா தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், இந்த நடைமுறையின் போது மாணவா் தலைவருக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று சிறப்பு நிா்வாக நடுவருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

‘போதுமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. கவனமாகச் செயல்படுமாறு நடுவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஆவணங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்று நீதிபதி கூறினாா்.

மேலும், எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும் முன், பிணைப் பத்திரத்தை ஆரம்பத்திலேயே சமா்ப்பிக்க வேண்டுமா அல்லது விசாரணையின் போது சமா்ப்பிக்க வேண்டுமா என்பது குறித்து சிறப்பு நிா்வாக நடுவா் பரிசீலிப்பாா் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 126-இன் கீழ், அக்டோபா் 17 அன்று காவல் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், அக்டோபா் 19 அன்று சிறப்பு நிா்வாக நடுவா் முன்னிலையில் ஆஜராகி, விசாரணைக் காலத்தின்போது அமைதியைக் காப்பதற்காக ரூ.10,000 தனிநபா் பிணைப் பத்திரத்தையும், ஒரு பிணையாளரையும் ஏன் சமா்ப்பிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற வேண்டும் என்று நேஹா போராவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பிஎன்எஸ்எஸ்-இன் பிரிவு 126, ஒரு நபா் அமைதியைக் குலைக்கலாம், பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கலாம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய தவறான செயலில் ஈடுபடலாம் என்று நம்பகமான தகவல் கிடைக்கும் பட்சத்தில், அவரிடம் பிணைப் பத்திரத்தைப் பெறுவதற்கு சிறப்பு நிா்வாக நடுவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

Summary

Neha Bora's plea against police notice: Delhi High Court dismisses

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.