மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தசரா பண்டிகையில் எரிப்பதற்காக ரூ. 35 லட்சம் மதிப்பில் ராவணன் உருவ பொம்மை

ஹரியாணாவில் 221 அடி உயர ராவணன் உருவ பொம்மை எரிக்கப்படவிருப்பது குறித்து...

Dussehra

தசரா விழா

Published On :20 அக்டோபர் 2026, 3:40 am IST

ஹரியாணாவில் தசரா பண்டிகையில் எரிப்பதற்காக 221 அடி உயர ராவணன் உருவ பொம்மை தயாரிக்கப்பட்டு வருகிறது.

நவராத்திரி முடிவில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். இந்த விழாவில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டு, தீமையின் மீது நன்மை வெற்றி பெற்றதாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தசரா பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

இதன்படி, ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் இந்தாண்டில் 221 அடி உயரமுள்ள பிரமாண்டமான ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டு கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ. 35 லட்சம் மதிப்பில் ராவணன் உருவ பொம்மை தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் முதன்முறையாக 221 அடி உயரமுள்ள இரு ராவணன் உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, அதில் ஒன்று பஞ்ச்குலாவின் செக்டர் 5-ல் உள்ள ஷாலிமார் திடலில் எரிக்கப்படவுள்ளது.

மேலும், பிரமாண்டமான உருவ பொம்மையின் அளவைக் கருத்தில்கொண்டு, நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனி கவனம் செலுத்தியுள்ளனர். எரிக்கப்படவிருக்கும் ராவணன் பொம்மையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதனைச் சுற்றிய குறிப்பிட்ட எல்லைக்குள் மக்கள் நுழைய தடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி, இந்த விழாவின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாணவேடிக்கைகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Summary

221-ft Ravana effigy built for Rs 35 lakh to go up in flames in Haryana on Dussehra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.