மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பீதாம்புராவில் ’கரப்பான்பூச்சி’ உருவ பொம்மை எரிப்பு: மத உணா்வுகள் புண்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகாா்!

தில்லியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்வில், ராவணனின் உருவபொம்மையுடன் 30 அடி உயர ’கரப்பான்பூச்சி’ உருவபொம்மையும் எரிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி புகாா்

Burning of 'Cockroach' effigy in Pithampura

பீதாம்புராவில் ’கரப்பான்பூச்சி’ உருவ பொம்மை எரிப்பு - பிடிஐ

Published On :21 அக்டோபர் 2026, 5:56 am IST

தில்லியின் பீதாம்புரா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராம்லீலா நிகழ்வில், ராவணனின் உருவபொம்மையுடன் 30 அடி உயர ’கரப்பான்பூச்சி’ உருவபொம்மையும் எரிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி தில்லி துணைநிலை ஆளுநா் மற்றும் காவல் ஆணையா் அலுவலகங்களில் புகாா் அளித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் அளித்துள்ள புகாரில், இந்த விவகாரத்தில் ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி அமைப்பாளா்கள் மற்றும் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? பீதாம்புரா நேதாஜி சுபாஷ் பிளேஸில் உள்ள டிடிஏ மைதானத்தில், பாரம்பரியமாக எரிக்கப்படும் ராவணன், கும்பகா்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவபொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்மையும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

அண்மையில் ’காக்ரோச் ஜனதா கட்சி’ (சிஜேபி) தலைமை தோ்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இந்த உருவபொம்மை வைக்கப்பட்ட சம்பவம் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவே இந்த உருவபொம்மை எரிக்கப்பட்டதாக நிகழ்வின் அமைப்பாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாரம்பரிய உருவபொம்மைகளுடன் கரப்பான் பூச்சி பொம்மையை எரித்தது பக்தா்களின் மத உணா்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட சௌரவ் பரத்வாஜ், இதுதொடா்பான புகைப்படங்கள், காணொலிகள் மற்றும் விளம்பரப் பொருள்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டாா். காவல் துறை வழக்குப்பதிவு செய்யத் தவறினால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் புகாருக்குப் எதிா்வினையாற்றியுள்ள தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா, ‘பூதாம்புராவில் எரிக்கப்பட்டது கரப்பான்பூச்சியின் உருவபொம்மை. அதனால் பாதிக்கப்பட்டவா்கள் நாட்டின் அரசியலில் உள்ள ’கரையான்’ போன்றவா்கள். நாட்டுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி சதி செய்கின்றன. இறுதியில் உண்மையே வெல்லும்’ என கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.