மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராம்லீலாவில் கரப்பான் பூச்சி உருவ பொம்மை; இலவச விளம்பரத்திற்கு நன்றி: அபிஜீத் தீப்கே

ராம்லீலாவில் கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிப்பது தொடர்பாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கருத்து தெரிவித்துள்ளார்.

ராம்லீலாவில் கரப்பான் பூச்சி உருவ பொம்மை / அபிஜீத் தீப்கே

Published On :20 அக்டோபர் 2026, 4:40 pm IST

கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிப்பது தொடர்பாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கருத்து தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா நிகழ்வில் ராவணன், மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் இந்தாண்டு 30 அடி உயரமுள்ள ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மை எரிக்கப்படவுள்ளது.

‘தூய்மை இந்தியா’ ‘தூய்மை தில்லி’ போன்ற பிரசாரங்களை மேற்கொள்ளும் விதமாக ‘அசுத்தம் மற்றும் அழுக்கை’ குறிக்கும் கரப்பான்பூச்சியின் உருவ பொம்மையை எரிக்கவுள்ளதாக ராம்லீலா நிகழ்வை ஏற்பாடு செய்த ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி தெரிவித்துள்ளது.

அக்கமிட்டியின் தலைவரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான அசோக் கோயல், இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என்று கூறினார்.

இதற்காக, அங்கு வைக்கப்பட்டுள்ள கரப்பான் பூச்சி உருவ பொம்மையின் காணொலி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இலவச விளம்பரத்திற்கு நன்றி என கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய காணொலியை பகிர்ந்து, இலவச விளம்பரத்திற்கு நன்றி என அபிஜீத் குறிப்பிட்டிருந்தார். சிஜேபி சட்ட வல்லுநர் ரத்னா சிங் இதனை ஒரு நாடகம் என்று குறிப்பிட்டார்.

தில்லியில் சிஜேபி நடத்தி வரும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உருவ பொம்மை எரிப்பு விவகாரம் நடைபெறுகிறது. முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிஜேபி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளும் அரசு தரப்பில் அவர்களுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

ஒரு மத நிகழ்வில் இவ்வாறு மதத்திற்கு அப்பாற்பட்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிப்பதற்கும், அவ்விழாவின் பாரம்பரிய முக்கியத்துவம் தற்கால அரசியல் நிகழ்வுகளுடன் கலக்கப்படுவதற்கும் சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

Summary

CJP founder Abhijeet Deepke has commented on the burning of a cockroach effigy during Ramlila.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.