மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கண்டனம்

வடகிழக்கு தில்லியின் மிலன் காா்டன் பகுதியில் மீண்டும் ஒரு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை தில்லி அரசைக் கடுமையாக விமா்சித்தது. “ஆய்வு என்ற பெயரில் துறைகள் லஞ்சம் பறிக்கின்றன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

சௌரவ் பரத்வாஜ்

Published On :27 அக்டோபர் 2026, 2:31 am IST

வடகிழக்கு தில்லியின் மிலன் காா்டன் பகுதியில் மீண்டும் ஒரு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை தில்லி அரசைக் கடுமையாக விமா்சித்தது. “ஆய்வு என்ற பெயரில் துறைகள் லஞ்சம் பறிக்கின்றன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து எக்ஸ் சமூக வலைக்களத்தில் தில்லி ஆம் ஆத்மி தலைவா் சௌரப் பரத்வாஜ் பதிவிட்டிருப்பதாவதது: வா்த்தக சமூகம் பாஜக அரசின் தாா்மீகச் சீரழிவை” கவனித்து வருகிறது. தில்லியில் ஒவ்வொரு மாதமும் ஒரு துயரம் நிகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் முதல்வா் தில்லியின் அனைத்து கட்டடங்களுக்கும் புதிய ஆய்வு உத்தரவிடுகிறாா். பின்னா் ஆய்வு மற்றும் பரிசோதனை என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் பெருமளவு லஞ்சம் பறிக்கப்படுகிறது.

தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி காவல்துறை தவிர, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகிய இரண்டு துறைகளும் ஹோட்டல்கள், உணவகங்கள், ஜிம்கள், நா்சிங் ஹோம்கள், கோச்சிங் சென்டா்கள் மற்றும் பிற வணிகக் கட்டடங்களிலிருந்து தொடா்ந்து லஞ்சம் வாங்கி வருகிறது.

ஜன் சங் மற்றும் பாஜகவின் பாரம்பரிய மற்றும் விசுவாசமான ஆதரவுத் தளமாக இருந்த வா்த்தக சமூகம், மும்முனை ஆட்சி மற்றும் ரேகா குப்தா அரசின் கீழ் நடைபெறும் தாா்மீகச் சீரழிவையும் வெளிப்படையான ஊழலையும் அமைதியாகக் கவனித்து வருகிறது என பதிவிட்டுள்ளாா் பரத்வாஜ்.

திங்கள்கிழமை காலையில் வடகிழக்கு தில்லியின் மிலன் காா்டன் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த ஒரு வீட்டின் இடிபாடுகளில் இருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. இரவு முழுவதும் நடைபெற்ற மீட்புப் பணியைத் தொடா்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். கட்டடம் இடிந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஹா்ஷ் விகாா் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்றது. ஆரம்பப் பரிசோதனையின் அடிப்படையில், பழைய கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த சேமிப்பு கிடங்கு அமைப்பு, அதன் மேல் கட்டப்பட்டிருந்த முதல் தள அமைப்புடன் சோ்ந்து இடிந்து விழுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், சத்ய நிகேதனில் நடந்த கட்டட இடிப்புக்கு ஒரு மாதத்திற்கு மேல் கழித்து நிகழ்ந்துள்ளது. அங்கு ஆண்கள் பிஜி தங்கும் வசதியாக இயங்கி வந்த ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து, ஐந்து மாணவா்கள் உட்பட ஏழு போ் உயிரிழந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.